பதிவு செய்த நாள்
05
பிப்
2018
12:02
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கீழக்குப்பம் விநாயகர், முருகன், முத்தாலம்மன், கன்னிமார் தேவிகள், நவக்கிரகங்கள் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இந்த கோவில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு புதியதாக 3 நிலை ராஜகோபுரம் மற்றும் விநாயகர், முருகன், முத்தாலம்மன், கன்னிமார் தெய்வம், நவகிரக சன்னதி ஆகியவைகள் அமைக்கப்பட்டு நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.அதனையொட்டி, கடந்த 2ம் தேதி காலை 10:00 மணிக்கு கணபதி பூஜை, கோ பூஜை, நவக்கிரக பூஜையுடன் மாலை 6:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், தீபாராதனை நடந்தது. 3ம் தேதி காலை 10:00 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜையும், மாலை 6:00 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.கும்பாபிேஷக தினமான நேற்று, காலை 6:00 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜை நடந்து காலை 9:00 மணிக்கு கடம் புறப்ாபடாகி 10:15 மணியளவில் ராஜகோபுரம், விமானம் ஆகியவற்றிற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினரும், கிராம மக்கள் செய்திருந்தனர்.