ராமேஸ்வரம்: பிப்.,23, 24ல் கச்சதீவு அந்தோணியார் சர்ச்சில் திருவிழா நடக்கிறது. ராமேஸ்வரத்தில் இருந்து பிப்.,23ல் காலையில் 62 விசைப்படகு மூலம் 2,103 பேர் செல்ல உள்ளனர். கச்சதீவு சர்ச் பல லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், தமிழக பக்தர்கள் பங்களிப்பாக கொடி மரத்திற்கான தேக்கு மரம் வழங்க, கடந்தாண்டு ராமேஸ்வரம் பக்தர்கள் முடிவு செய்தனர். ஆனால் கடந்தாண்டு மீனவர் பிரிட்ஜோ படுகொலையை கண்டித்து, கச்சதீவு விழாவை புறக்கணித்தனர். இந்தாண்டு 53 அடி உயர தேக்கு கொடி மரத்தை ராமேஸ்வரத்தில் தயார் செய்துள்ளனர். இந்த கொடி மரத்தை பிப்.,23ல் படகு மூலம் கச்சதீவு கொண்டு செல்ல உள்ளதாக ராமேஸ்வரம் பாதிரியார் அந்தோணிச்சாமி தெரிவித்தார்.