பதிவு செய்த நாள்
08
பிப்
2018
12:02
அவிநாசி : அவிநாசி அங்காள பரமேஸ்வரி கோவில், குண்டம் திருவிழா துவங்கியுள்ளது. அவிநாசியில், பிரசித்தி பெற்ற, அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவில், 73 வது, நந்தா தீப குண்டம் திருவிழா, கடந்த, 4ம் தேதி, நந்தா தீபம் ஆரோகணம் நிகழ்ச்சியுடன் துவங்கியது.வரும், 11ல், அம்மன் சாட்டு விழா; 13ம் தேதி, மகா சிவராத்திரி கொடியேற்று விழா நடக்கிறது. வரும், 14ம் தேதி அதிகாலை, அம்மன் வேலில் எழுந்தருளும் அருட்பெரும் காட்சியான, அலகு தரிசனம் நடக்கிறது. வரும், 15ம்தேதி அதிகாலை, ரதா ரோகணம் மற்றும் குண்டம் இறங்குதல் நடக்கிறது. இதில், கோவில் பூஜாரிகள் மற்றும் பக்தர்கள், குண்டம் இறங்குகின்றனர், இரவு, ரிஷப வாகன காட்சி நடக்கிறது.வரும், 16ம் தே இரவு வேடுபரி, பரிவேட்டை, தெப்பத்தேர் உற்சவங்கள் நடக்கிறது. வரும், 17 ம் தேதி கொடி இறக்கம், மஞ்சள் நீர் உற்சவம்; நடைபெற உள்ளது.