பத்ரகாளியம்மன் கோவிலில் நாளை குண்டம் இறங்கும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2018 12:02
ஈரோடு: ஈரோடு, கோட்டை சின்ன பாவடியில், பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த, 4ல் கணபதி ஹோமம், பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் அம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று அக்னி கபாலம் ஊர்வலம் நடந்து. பத்ரகாளியம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதி மக்கள் அக்னி கபாலத்தை தரிசனம் செய்து வணங்கினர். இன்று இரவு, 9:00 மணிக்கு கோவில் முன்பு குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சியும், நாளை அதிகாலை, 6:00மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளைப்பெற வேண்டும் என, விழாக் கமிட்டியார் அழைப்பு விடுத்துள்ளனர்.