Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லையப்பர் கோயிலிலும் கடைகளை ... வள்ளுவர் கோட்டத்தில் சிவ ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் உண்ணாவிரதம் வாபஸ்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2018
01:02

ஸ்ரீவில்லிபுத்துார் : ஆண்டாளை அவதுாறாக பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்க கோரி உண்ணாவிரதம் மேற்கொண்ட ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர், மன்னார்குடி ஜீயரின் வேண்டுகோளை ஏற்று கைவிட்டார். கடந்த ஜன.7ல் ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆண்டாளை அவதுாறாக பேசிய வைரமுத்து, ஆண்டாள் சன்னதிக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்துார் சடகோபராமானுஜ ஜீயர் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் துவக்கினார். இரண்டாம் நாளாக நேற்றும் தொடர்ந்தார். காலை 9:00 மணிக்கு உண்ணாவிரத மண்டபத்துக்கு பா.ஜ., தேசிய செயலர் எச் .ராஜா வந்து ஜீயரை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடகோரினார். காலை 11:00மணிக்கு மன்னார்குடி செண்டலங்கார செண்பகராமானுஜ ஜீயர் ஸ்ரீவில்லிபுத்துார் வந்தார். துறவு வாழ்க்கை மேற்கொள்ளும் ஜீயர்கள் உண்ணாவிரதம் இருப்பது நாட்டிற்கும், மனித குலத்திற்கும் நல்லதல்ல, என கூறி சடகோப ராமானுஜ ஜீயரிடம் உண்ணாவிரதத்தை கைவிட கோரினார்.

இதே கருத்தை முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.வி.சேகர் மற்றும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளும் வலியுறுத்தினர். இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் கூறுகையில், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் வலியுறுத்தியதை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிடுகிறேன். தன்னை நிந்தித்தவர்களை ஆண்டாள் தாயாரே தண்டிப்பாள். இனிமேல் இந்து மதத்தை மட்டுமல்ல எந்த மதத்தையும் யாரும் இழிவுபடுத்தி பேசக்கூடாது. இந்து மக்கள் விழிப்புணர்விற்காக ஆன்மிக பிரசாரம் தொடரும், என்றார்.  இதையடுத்து மன்னார்குடி ஜீயர் வழங்கிய துளசி தண்ணீரை பருகி உண்ணாவிரதத்தை ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் நிறைவு செய்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஏழாம் ... மேலும்
 
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar