சென்னிமலை: சென்னிமலையை அடுத்த ஈங்கூர், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் குண்டம் மற்றும் பொங்கல் விழா, கடந்த, 6ல் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தீ மிதிக்கும் நிகழ்ச்சி, நேற்று காலை நடந்தது. இதில் நூற்றுகணக்கான பக்தர்கள், குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். அதை தொடர்ந்து தீர்த்த அபி?ஷகம், பொங்கல் வைபவம் நடந்தது. இன்று மாலை மஞ்சள் நீராட்டம், மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.