பதிவு செய்த நாள்
16
பிப்
2018
12:02
பவானி: மாசி அமாவாசை நாளான நேற்று, பவானி, கூடுதுறைக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்தனர். உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்ட, மாநில பக்தர்களும் வந்தனர். அமாவாசை நாள் என்பதால், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணீரும் விடுதல் மற்றும் திருமண தடை தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம் உட்பட பல வகையான பரிகாரங்களை செய்தனர். பின், காவிரி ஆற்றில் புனித நீராடி, சங்கமேஸ்வரர் கோவிலில் வழிபட்டனர். பக்தர்கள் குவிந்ததால், கோவில் வளாகம், ஆற்றுப்படித்துறை களை கட்டியது.