சித்தூர் : காளஹஸ்தியில் ஞானபிரசுனாம்பிகை சமெத காளஹஸ்திஸ்வரருக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பிரம்மோற்சவத்தின் 10ம் நாளான நேற்று(பிப்.16ல்) அதிகாலை ஞானபிரசுனாம்பிகை சமெத காளஹஸ்திஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.