இடைப்பாடி: இடைப்பாடி அருகே, ஒட்டப்பட்டி, ஆனந்தாயி அங்காளம்மன் கோவில் மாசி திருவிழா, 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று, தெப்பத்திருவிழா நடந்தது. அதில் நடந்த ஊஞ்சல் சேவை நடந்தது. குளத்திலிருந்து அங்காளம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பரமானந்த சுவாமிகள், ஊஞ்சல் உற்சவத்தை தொடங்கி வைத்தார். இதில், திரளான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.