பதிவு செய்த நாள்
19
பிப்
2018
01:02
திருப்பூர்: மகா பெரியவா கைங்கர்ய அறக்கட்டளை சார்பில், காஞ்சி மாமுனிவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 125வது ஜெயந்தி விழா, திருப்பூரில் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று காலை, 7:00 மணிக்கு, அமர்ஜோதி கார்டனில், உஞ்சவ்ருத்தி விழா நடைபெற்றது. காஞ்சி பீடத்தை சேர்ந்தவர்கள், அமர்ஜோதி நகரில் துவங்கி, நாராயணசாமி நகர், ஏ.எஸ்.,, நகர், அமர்ஜோதி கார்டன் வரை, வீடு வீடாக சென்று பஜனை நடத்தினர். அமர்ஜோதி விநாயகர் கோவிலில், மஹா தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து, வாலிபாளையத்தில் உள்ள தொழில் வர்த்தக சபையில், குருநாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. கடம் வித்வான் விக்கு விநாயகராம் குழுவினர், நியூஜெர்ஸி சுவாமிநாத பாகவதர் குழுவினர், சங்கீர்த்தனம் நடத்தினர்.