கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி தெப்ப திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2018 10:02
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசி தெப்ப திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை மத்திய பேருந்து நிலையம் அருகே கூடல் அழகர் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் பெரியாழ்வாரால் பல்லாண்டு பாடல் பெற்ற கோயில் இது. இங்குள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் சிறப்புடையது. இக்கோயிலில் நேற்று (பிப் 19ல்) மாசி தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.