பதிவு செய்த நாள்
22
பிப்
2018
01:02
திருப்போரூர்தி:ருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாசி கிருத்திகை விழா, இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை, 9:00 மணிக்கு, சுவாமி வீதியுலாவும், தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு உற்சவருக்கு மகா அபிஷேகமும் நடைபெறும். முன்னதாக, நேற்று பரணி உற்சவத்தையொட்டி மூலவருக்கு மகா அபிஷகேம் நடைபெற்றது. கந்தசுவாமி கோவிலில் நடைபெற்றுவரும் பிரம்மோற்சவத்தில் வரும் கிருத்திகை என்பதால், இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பர் என, எதிர்பாக்கப்படுகிறது.