தேவகோட்டை: ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு ஆறாவது பாதயாத்திரை குழு புறப்பட்டது. முன்னாள் வங்கி மேலாளர் சுந்தரம் தலைமையில் 27 பேர் ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதர் பர்வத வர்த்தினியை வணங்கி அங்கிருந்து கோடி தீர்த்தம், கடல் மணலையும் சேகரித்து கடந்த 21 ந்தேதி புறப்பட்டனர். 2500 கி.மீ.,பயணம் மேற்கொள்ளும் காசியாத்திரை குழுவினர் நேற்று காலை தேவகோட்டை வந்தனர். அக்குழுவிற்கு நகர மக்கள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. முதல் குழு தலைவர் அருசோமசுந்தரன், ஜமீன்தார் சோமநாராயணன், நகரத்தார் பள்ளிகளின் செயலர் ராமநாதன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அறங்காவலர்கள், குழு ஒருங்கிணைப்பாளர் காசிநாதன், அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, லோட்டஸ் பள்ளி ஆலோசகர் குமரப்பன்,கல்லுாரி முன்னாள் முதல்வர் அருணாசலம்,லயன்ஸ் நிர்வாகி அய்யப்பன் உட்பட ஏராளமானோர் வரவேற்றனர்.