பதிவு செய்த நாள்
02
மார்
2018
01:03
ராஜகுளம்: ராஜகுளம் கிராமத்தில், வரதராஜப் பெருமாள் தெப்போற்சவம், இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த, ராஜகுளம் கிராமத்தில், மாசி மாத பவுர்ணமி தினத்தன்று, காஞ்சி வரதராஜப் பெருமாள் தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு, 25வது தெப்போற்சவத்தை முன்னிட்டு, இன்று காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காஞ்சி வரதராஜப் பெருமாள் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருள்கிறார். நத்தப்பேட்டை, வையாவூர், கவுரியம்மன்பேட்டை வழியாக, ராஜகுளம் கிராமத்திற்கு வந்தடைவார். அதையடுத்து மூவரும், மீண்டும் கண்ணாடி பல்லக்கில் சிட்டியம்பாக்கம், இலுப்பப்பட்டு, பழைய இலுப்பப்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களுக்கு சென்று, மாலை, ராஜகுளம் மண்டபத்திற்கு வருவர். மூவருக்கும், சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். இரவு, மலர் அலங்கார தெப்பலில், காஞ்சி வரதராஜப்பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.