Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மின்னொளி அலங்காரத்தில் கோட்டை ... ராஜகுளத்தில் இன்று வரதர் தெப்போற்சவம் ராஜகுளத்தில் இன்று வரதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசி மக தீர்த்தவாரி உற்சவம் சதுரங்கப்பட்டினத்தில் விமரிசை
எழுத்தின் அளவு:
மாசி மக தீர்த்தவாரி உற்சவம் சதுரங்கப்பட்டினத்தில் விமரிசை

பதிவு செய்த நாள்

02 மார்
2018
01:03

சதுரங்கப்பட்டினம்: சதுரங்கப்பட்டினம், மலைமண்டல பெருமாள், கடலில் புனித நீராடி, மாசி மக தீர்த்தவாரி உற்சவம், கோலாகலமாக நடந்தது. கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினத்தில், வைணவ கோவிலாக, மலைமண்டல பெருமாள் கோவில் விளங்குகிறது. இங்கு வீற்றுள்ள உற்சவர் வரதராஜ பெருமாள் இறைவன், மாசி மக பவுர்ணமி நாளில், இப்பகுதி கடலில் புனித நீராடி, தீர்த்தவாரி உற்சவம் கண்டு, பக்தர்களுக்கு அருள்புரிவார். இந்நாளான நேற்று காலை, சுவாமி, தேவியருடன், சிறப்பு மலர் அலங்காரத்தில், கோவிலில் புறப்பட்டு, வேத பாராயண, மேளதாள முழக்கத்துடன், இப்பகுதி கடற்கரையை அடைந்தார். மெய்யூர், ஆதிகேசவ பெருமாள்; கல்பாக்கம் நகரியம், வெங்கடகிருஷ்ணர், ஸ்ரீனிவாசர், ஏகாம்பரேஸ்வரர்; விட்டிலாபுரம் பாண்டுரங்கர்; பெருமாள்சேரி ஆஞ்சநேயர்; ஈகை, முள்ளிகொளத்துார் லட்சுமி நாராயணர், சுற்றுப்புற சுவாமியர் அணி வகுத்து வந்தடைந்தனர். மீனவ பகுதிகளின், ஊத்துக்காடு அம்மன், பெரியபாளையத்தம்மன், செல்லியம்மன் உள்ளிட்ட சுவாமிகள், கடற்கரை வந்த சகோதர சுவாமிகளை வரவேற்று, அவர்களும் இணைந்தனர். மலைமண்டல பெருமாள் உள்ளிட்டோருக்கு, வழிபாடு நடத்தப்பட்டு, பெருமாள், சக்கரத்தாழ்வாராக, கடலில் புனித நீராடினார். பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என முழங்கி, சுவாமியரை தரிசித்து வழிபட்டனர்; நீராடினர். தீர்த்த வாரியைத் தொடர்ந்து, வரதராஜர், ஆதிகேசவர் வீதியுலா சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி தேய்பிறை சஷ்டியில் கந்தனை வணங்க துன்பம் யாவும் நீங்கும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 
temple news
குளித்தலை: கீழ தாலியாம்பட்டி கிரா மத்தில், மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன் னிட்டு கடந்த, 5ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar