Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கோட்டை மாரியம்மன் கோயிலில் ... வசந்த காலத்தை வரவேற்று வசந்த காலத்தை வரவேற்று "ஹோலி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதையில் மாசிமகத் திருவிழா: சுப்ரமணியர் தெப்பத்தில் உலா
எழுத்தின் அளவு:
விருதையில் மாசிமகத் திருவிழா: சுப்ரமணியர் தெப்பத்தில் உலா

பதிவு செய்த நாள்

03 மார்
2018
11:03

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழாவில், சுப்ரமணியர் சுவாமி தெப்பத்தில் உலா வந்து அருள்பாலித்தார். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழா, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், அம்பாள் (பாலாம்பிகை, விருத்தாம்பிகை), சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வீதியுலா, இரவு சிறப்பு வாகனங்களில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.

இன்று, மாசிமக பிரம்மோற்சவ 11ம் நாள் உற்சவமாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெப்பல் உற்சவம் நடந்தது. இதையொட்டி, நேற்று இரவு புஷ்ப வாகனத்தில் சுப்ரமணியர் சுவாமி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் சுவாமி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து, அதிகாலை 3:00 மணிக்கு புதுப்பேட்டை அம்மன் குளம் வந்தடைந்தது. அங்கு, அலங்கரித்த தெப்பத்தில் புஷ்ப விமானத்தில் சுப்ரமணியர் சுவாமி வைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, வான வேடிக்கைகளுடன் 3:20 மணிக்கு தெப்பல் உற்சவம் துவங்கியது. நகராட்சி கமிஷனர் பாலு உள்ளிட்ட அலுவலர்கள் தெப்பத்தில் பங்கேற்றனர். அம்மன் குளத்தை சுப்ரமணியர் சுவாமி மூன்று முறை வலம் வந்து அருள்பாலித்தார். அம்மன் குளத்தை சுற்றி விளக்குகள் ஏற்றி, சுவாமிக்கு தீபாராதனை செய்து, பக்தர்கள் வழிபட்டனர். காலை 5:30 மணிக்கு தெப்ப உற்சவம் முடிந்து, சுவாமி பல்லக்கில் கோவிலுக்கு வந்தடைந்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். 12ம் நாள் நிறைவாக நாளை, சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar