பதிவு செய்த நாள்
03
மார்
2018
01:03
அவிநாசி;திருமுருகன் பூண்டி கோவில் தேர்த்திருவிழாவில், இன்று தெப்ப உற்சவம் நடக்கிறது. திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவிலில், தேர்த்திருவிழா, கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் நேற்றும், நேற்று முன்தினமும் நடந்தது. முயங்கு பூண்முலை வல்லியம்மையுடன் திருமுருகநாதசுவாமி, சோமாஸ்கந்தர் ரூபத்திலும், வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதர் மற்றும் விநாயகர் தேர்களில் எழுந்தருளி தேர் வீதிகளில் உலா வந்தனர். நேற்று முன்தினம் முதல் நிலையுடன் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாளான நேற்றும், தேரோட்டம் நடந்து, பக்தர்களின் கரகோஷம் முழங்க, தேர் நிலையை அடைந்தது. இன்று, பரிவேட்டை, குதிரை, சிம்ம வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. இன்று மாலை, 6:30 மணிக்கு பிரசித்தி பெற்ற மகாமக திருக்குளத்தில், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளும் தெப்பத்திருவிழா நடக்கிறது. நாளை, கோவில் தல வரலாற்றில் தொடர்புடைய, திருமுருகநாதரின் திருவிளையாடலான, சுந்தரர் வேடுபறி திருவிழா நடக்கிறது.