முத்தாலம்மன், தொட்டிச்சியம்மன், கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2018 01:03
வடமதுரை:வடமதுரை வெள்ளமடைப்பிரிவில் உள்ள விநாயகர், முத்தாலம்மன், தொட்டிச்சியம்மன், கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை கிராம தெய்வ வழிபாடு முடிந்ததும், தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் முதல் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜைகளை தொடர்ந்து, கடம் புறப்பாடாகி கோபுர கலசங்களில் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஆதிகாளியம்மன் கோயில் அர்ச்சகர் பிரசன்னவெங்கடேஷ் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். வடமதுரை, ரெட்டியபட்டி, லக்கன்தெரு பகுதி கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.