பதிவு செய்த நாள்
20
மார்
2018
01:03
அன்னுார் : அன்னுார் தமிழ்ச்சங்கம் சார்பில், இலக்கிய சொற்பொழிவு நடந்தது. சங்க தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மணிமேகலை என்னும் தலைப்பில், புலவர் ராமசாமி பேசுகையில்,சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள்தான் மணிமேகலை.கோவலன் மற்றும் கண்ணகியின் இறப்புக்கு பிறகு, மணிமேகலையை புத்த மடத்தில் சேர்த்தார் மாதவி. அங்கிருந்து மணிபல்லவத்தீவுக்கு சென்ற மணிமேகலைக்கு, மக்களின் பசிப்பிணி போக்கும் அட்சய பாத்திரம் கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப்போக்குவதையே, கடமையாக கொண்டு வாழ்ந்து மறைந்தார், என்றார்.புலவர் ராமதாஸ், வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் தலைப்பில் பேசுகையில்,பசித்தவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதை, செயலிலும் செய்து காண்பித்தவர் வள்ளலார். புலால் உண்ணாமையை, முக்கியமாக வலியுறுத்திய அவரை படித்தால், அனைத்து உயிர்களிடமும் அன்பு ஏற்படும், என்றார். சங்க செயலாளர் அன்னாசிக்குட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.