பரமக்குடி:பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவின் மார்ச் 26ம் நாளன்று வண்டிமாகாளி விழா நடக்கவுள்ளது. பங்குனித் திருவிழாமார்ச் 23 ல் துவங்கி, நான்காம் நாளன்று மாலை 5:00 மணிக்கு இரண்டுமாடுகள் பூட்டிய வண்டியின் உச்சியில் காளி வேடம் அணிந்தவர் அமர்ந்து வர,அதன் கீழே பெண் வேடமிட்ட ஆண்கள் ஆடி வருவர். தொடர்ந்துஇரவு 7:00 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கும். அன்று காலைமுத்தாலம்மன் காளி அலங்காரத்துடனும், இரவு ரிஷப வாகனத்திலும்வீதி வலம் வருவார்.