பதிவு செய்த நாள்
21
மார்
2018
12:03
காரைக்குடி: அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, யாக சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அரியக்குடி திருவேங்கடமுடையான் திருக்கோயில் கும்பாபிஷேகம் வருகிற 26-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 8:30 மணி முதல் 12:30 மணி வரை அனுக்கை, மகாசங்கல்பம், வாஸ்து சாந்தியும், மாலை 5:30 மணி முதல் முதல்கால யாக சாலை பூஜையும் நடக்கிறது.
23-ம் தேதி இரண்டாம், மூன்றாம் காலம், 24-ம் தேதி நான்காம், ஐந்தாம் காலம், 25-ம் தேதி ஆறாம், ஏழாம் கால யாக சாலை பூஜையும் நடக்கிறது. 26-ம் தேதி காலை 4:00 மணிக்கு எட்டாம் கால பூஜையும், 5:00 மணிக்கு கடம் புறப்பாடும், 6:18 மணி முதல் 7:18 மணிக்குள் அனைத்து விமானங்கள், மற்றும் ராஜகோபுரங்கள் கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு கல்யாண உற்சவம், இரவு 9:00 மணிக்கு கருட சேவை புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அரியக்குடி அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் அறப்பணிக்குழுவினர், அரியக்குடி அலர்மேல் மங்கை தாயார் அறப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.