பதிவு செய்த நாள்
22
மார்
2018
01:03
சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த, தேவிகாபுரத்தில், பெரியநாயகி உடனுறை, கனககிரீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர பெருவிழா, நேற்று மாலை, 6:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும், ஏப்., 2, வரை நடக்கும். தொடர்ந்து, பத்து நாட்கள் இரவு, வெவ்வேறு வாகனத்தில், சுவாமி வீதியுலா நடக்கும். இதை முன்னிட்டு, மூலவர் மற்றும் உற்சவர் பெரியநாயகி அம்மன் மற்றும் கனககிரீஸ்வரருக்கு, சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர். வரும், 27ல், தேரோட்டம் நடக்க உள்ளது.