பதிவு செய்த நாள்
23
மார்
2018
12:03
பொன்னேரி : பொன்னேரி, ஆனந்தவல்லி அம்மையில், பங்குனி பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 7:30 மணிக்கு, கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஓம் நமசிவாயா என, பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மாடவீதிகள் வழியாக சென்ற அகத்தீஸ்திரர், ஆனந்தவல்லி, முருகர் வள்ளி தெய்வானை, சண்டிகேஸ்வரர், விநாயகர் சுவாமிகளை பக்தர்கள் வணங்கி வழிபட்டனர்.இரவு, 8:30 மணிக்கு, அன்னவாகன காட்சி, பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.தொடர்ந்து, ஏப்ரல், 4ம் தேதி வரை சூரிய பிரபை , சிம்ம வாகன காட்சி, அதிகார நந்தி, பூத வாகன உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் நடைபெற உள்ளன.இம்மாதம், 28ம் தேதி, காலை, 6:00,மணிக்கு ரத உற்சவம் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற உள்ளது.