பதிவு செய்த நாள்
24
மார்
2018
05:03
மானாமதுரை: பங்குனியில் மாரியம்மன் கோயில்களில் பொங்கல்விழா மிகச்சிறப்பாக
நடைபெறுவது வழக்கம். தென் மாவட்டங்களில் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயி லில் நடைபெறும் பொங்கல் விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்துதீச் சட்டி, கரகம், கரும்பால் தொட்டி கட்டுதல் மற்றும் பல வேண்டுதல்களை நிறைவேற்றி செல்வர். பல பக்தர்கள் கடுமையான விரதம் இருந்து நேர்த்திக்கடனாக 21, 31, 51, 101, கண் தீச்சட்டிகள் எடுத்துவேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
3 தலைமுறைகளாக இரும்பிலான தீச்சட்டிகளை செய்து வரும் கண்ணன் குடும்பத்தினர்
கூறுகையில், எங்களிடம் மதுரை, திருப்புவனம், தாயமங்கலம், இருக்கன்குடி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்துவரும் பக்தர்கள் அவர்கள் நேர்ந்து கொண்ட கண்களுக்கேற்ப தீச்சட்டிகளை ஆர்டர் கொடுத்து வருகின்றனர். தெய்வ காரியம் என்பதால் நாங்கள் அவர்க ளிடம் பேரம் பேசாமல் கொடுக்கிற கூலியை வாங்கி கொள்வோம், மேலும் நாங்களும் விரதமிருந்து இந்த தீச்சட்டிகளை செய்து வருகிறோம் என்றார்.
தேவைக்கு 94434 05695.