பதிவு செய்த நாள்
27
மார்
2018
12:03
சென்னை: சென்னை, வடபழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, லட்சார்ச்சனை இன்று துவங்குகிறது. சென்னை, வடபழனி யில் அமைந்துள்ளது, வடபழனி ஆண்டவர் கோவில். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, இக்கோவிலில், லட்சார்ச்சனை இன்று துவங்கி, மார்ச், 29ம் தேதி முடிகிறது. பங்குனி உத்திரமான, மார்ச், 30ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு நடக்கிறது. மார்ச், 31ம் தேதி முதல், ஏப்., 2ம் தேதி வரை, இரவு, 7:00 மணிக்கு, தெப்ப உற்சவம் நடக்கிறது. ஆனால், குளத்தில் நீர் இல்லாததால், நிலை தெப்பத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலைத் தெப்பம், பக்தர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவிலுக்கு, அன்பளிப்பு அளிக்கும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். அவர்களின் உதவியுடன், குளத்தில் நீர் நிரப்பி, தெப்ப உற்சவமாக நடத்த வேண்டும். அதற்கு, உரிய காலம் உள்ளதால், கோவில் நிர்வாகம் முயற்சிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரி உள்ளனர்.