ராவணனின் மகன் இந்திரஜித், தம்பி கும்பகர்ணன் ஆகியோர் ராமனோடு போரிட்டு இறந்தனர். பிறகு ராவணனே போரிட வந்தான். தன் சக்தி அனைத்தையும் பயன்படுத்தியும் எதுவும் எடுபட வில்லை. அவன் கிரீடம் கீழே விழுந்தது. ஆயுதங்களை இழந்தான். அவனது இருபது கைகளும் செயலற்று நின்றன. ஆயுதமில்லாத அவனை கொல்ல விரும்பாத ராமர்,“இன்று போய் நாளை வா” என்று இரக்கமுடன் அனுப்பினார். கடைசி நேரத்திலாவது அவன் திருந்தி, சீதையை விடுவிக்க வேண்டும் என்பதே ராமரின் எதிர் பார்ப்பு. அந்தளவுக்கு கருணைக் கடலாக விளங்கினார் ராமர்.