Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் வர ... காஞ்சி ஏகாம்பரநாதர் தேர் திருவிழா கோலாகலம் காஞ்சி ஏகாம்பரநாதர் தேர் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
164 ஆண்டுகள் பழமையான சிங்கப்பூர் கோயிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
164 ஆண்டுகள் பழமையான சிங்கப்பூர் கோயிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

28 மார்
2018
11:03

சிங்கப்பூர்: ஆசிய நாடான சிங்கப்பூரில் உள்ள, 164 ஆண்டுகள் பழமையான கோயில், 20 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படுகிறது. அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிய நாடான சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் அமைந்துள்ளது, ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில். தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள, 164 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலில், புனரமைப்பு பணி நடந்து வருகிறது. இந்தியாவில் இருந்து சென்றுள்ள, 20 பேர் அடங்கிய குழு, உள்ளூர் மக்களுடன் இணைந்து, இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது.ஹிந்து கோவில் ஆகம விதிகளின்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்படும். அதன்படி, 1979, 1992 மற்றும் 2005ல், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.தற்போது, கோவிலின் பழமை மாறாமல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. மேலும், பக்தர்களுக்கு கூடுதல் இடவசதி கிடைக்கும் வகையில் விரிவாக்கப் பணிகளும் நடக்கின்றன. தினசரி நடக்கும் பூஜைகளுக்கு இடையூறு இல்லாமல், இந்தப் பணிகள் நடந்து வருவதாக, கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.பராமரிப்பு பணிகள் முடிந்து, ஏப்., 22ல், கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில், எட்டாம் ஆண்டு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொது வழியில் மூன்று மணி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி – திண்டிவனம் சாலை மொரட்டாண்டி, 27 அடி உயர விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில், ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்தசேவை உற்சவம் நடந்தது.சொரப்பூர் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள சுப்பையா ஸ்வாமி திருமடத்தில் சென்னை வேதபாரதி குருகுலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar