தென்காசி:தென்காசி குலசேகரநாதர் கோயிலில் வரும் 8ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.தென்காசி குலசேகரநாதர் கோயிலில் ஆண்டு தோறும் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ பெருமானுக்கு திருவாதிரை திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் 30ம் தேதி திருவாதிரை திருவிழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையயில் திருவெம்பாவை மற்றும் தீபாராதனையும், இரவு சிறப்பு தீபாராதனையும் நடந்தது.விழாவின் முக்கிய நாளான வரும் 8ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. அன்று அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. நவக்கிரக ஹோமம், ருத்ர ஹோமம், சிறப்பு அபிஷேகம், கோ பூஜை நடக்கிறது. இதன் பின்னர் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனையும், ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.