பதிவு செய்த நாள்
02
ஏப்
2018
12:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் நடந்து செல்ல, கூல் பெயின்ட் அடிக்கும் பணி நடக்கிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள், பக்தர்கள் வரும்போது, கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரம் மற்றும் வடக்கு பகுதியில் உள்ள அம்மனி அம்மன் கோபுரம் வழியாக வருகின்றனர். தற்போது, கோடை வெயில் கொளுத்தும் நிலையில் காலை, 9:00 மணிக்கு மேல், பக்தர்கள் கோவிலிற்குள் நடந்து வரும்போது, கீழே கால் வைக்க முடியாத அளவிற்கு, தரையில் வெப்பமிருக்கும். பக்தர்கள் வசதிக்காக, நடந்து செல்லும் பாதையில் மட்டும், கூல் பெயின்ட் அடிக்கும் பணியில், கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.