அந்தியூர் பத்ர காளியம்மன் கோவில் குண்டத்துக்கு விறகுகள் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2018 01:04
அந்தியூர்: அந்தியூரில் பிரசித்தி பெற்ற, பத்ர காளியம்மன் கோவில் விழாவில், 4ல் குண்டம் திருவிழா, வெகு விமர்சையாக நடக்கவுள்ளது. இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதிப்பார்கள். இதையொட்டி கோவிலில், பல்வேறு ஏற்பாடு நடந்து வருகிறது. தீ மிதிக்க, 60 அடி நீள குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. குண்டத்துக்கு விறகு தருவதாக வேண்டிக் கொண்ட பக்தர்கள், அனுப்பி வருகின்றனர். வேம்பு, புன்னை, அரசமரம், ஆலமரம் உள்ளிட்ட விறகு கட்டைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். விறகுகளை நாளை இரவு வரை பக்தர்கள் அனுப்பி வைப்பார்கள். இவை கோவில் முன் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.