பதிவு செய்த நாள்
04
ஏப்
2018
02:04
ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் கண்ணாடி கிணறை, உண்டியலாக மாற்றியது பக்தர்களிடம் மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. இக்கோயிலின் உட்புறத்தில் கண்ணாடி கிணறு உள்ளது. இங்கு தான் பெரியாழ்வார் தொடுத்த மாலையை, தானே சூடி அழகு பார்த்ததால் தான், சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் என்ற பெயரும் ஆண்டாளுக்கு உண்டு. இத்தகைய சிறப்பு கிணறை,உண்டியலாக கோயில் நிர்வாகம் மாற்றி விட்டது. திருமணவேண்டுதலுக்காக வரும் பெண்கள், கண்ணாடி கிணறை பார்க்கமுடியாமல், ரூபாய் நோட்டுகளை பார்க்கும் நிலை உருவாகி உள்ளது.அறநிலையத்துறை காசுபார்க்கும் துறையாக உள்ளதே தவிர, பக்தியை வளர்ப்பதாக இல்லை என்ற குற்றச் சாட்டும் எழுந்துள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில நிர்வாகி சரவணகார்த்திக், ”பக்தர்களுக்கான வசதிகளை செய்யாமல், வருமானத்தையே குறியாக கொண்டுள்ளது. இதன் உச்சம் தான் கண்ணாடி கிணறை உண்டியலாக மாற்றியது. மாற்றாவிட்டால் போராட்டம் நடத்துவோம், ”என்றார். செயல் அலுவலர் நாகராஜன் கூறுகையில்,” நடவடிக்கைக்கு பரிசீலிக்கபடும்,”என்றார்.