Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கோயில் கோபுரமும், விமானமும் ஒன்றா? கோயில் கோபுரமும், விமானமும் ஒன்றா? கோயிலில் சுவாமிக்கு தேங்காய் படைப்பது ஏன்? கோயிலில் சுவாமிக்கு தேங்காய் ...
முதல் பக்கம் » துளிகள்
பாவம் போக்கும் கங்கையின் வேறு பெயர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2018
17:59

கங்கையில் நீராடுவது, கங்கைக் கரையில் வசிப்பது, கங்கா என்று உச்சரிப்பது, கங்கையின் நீரைப் பருகுவது, கங்கையை நினைப்பது...இவை யாவும் பாவம் போக்கும் செயல்களாகும். இமயமலையில், கோமுக் பனிச் சிகரத்தில் உற்பத்தியாகி, மேற்குவங்காளத்தில் உள்ள கங்காசாகரில் (வங்கக் கடலில்) சங்கமிக்கிறாள் கங்காதேவி இவள், தான் பாய்ந்து வரும் வழிநெடுகிலும் உள்ள பல்வேறு தலங்களில், பல்வேறு பெயர்களில்  சிறப்புடன் திகழ்கிறாள்.

அமர்_கங்கா: கடல் மட்டத்தில் இருந்து சுமார் 12,000 அடி உயரத்தில் உள்ளது அமர்நாத் குகை. இதன் அருகே ஓடும் அமர் கங்கா நதி நீர் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.

நீல_கங்கா: ஒரு முறை, பார்வதிதேவியுடன் விளையாடியபோது, அவளின் கண் மை, சிவனாரின் முகத்தில் ஒட்டிக் கொண்டது. பரமனார் கங்கையில் முகம்கழுவ... நதி நீர், நிறம் மாறியது இதனால், நீல கங்காஎனப் பெயர் பெற்றது.

காளி_கங்கா:  அமைதியின்றி ஆர்ப்பரித்து ஓடும் இந்த நதியின் சீற்றம், காண்போரை பயம் கொள்ள வைக்கும்.

ராம்_கங்கா: இது, உத்தரப் பிரதேசத்தில்- காசிப்பூர் என்ற இடம் தாண்டிப் பாய்கிறது.

ஜட_கங்கா: உத்தரப் பிரதேசம், குமாயூன் மண்டலின் பித்தோ ராகர் என்ற ஜில்லாவில் பாய்கிறது.

கோரி_கங்கா: வெண்மையான நீர் கொண்டு வருவ தால் கோரி (வெள்ளை) கங்கா என்று பெயர் தார்சூலா/முன்ஸியாரி கிராமத்தையடுத்து பாய்கிறது.

கருட_கங்கா: உத்தரப் பிரதேசம், அல்மோரா- பைஜ்நாத் சோத்திரம் அருகே பாயும் கங்கைக்கு, கருட கங்கா என்று பெயர்.

பாண_கங்கா: ஜம்முவைத் தாண்டி, ஸ்ரீவைஷ்ணவி கோயில் அருகே பாய்கிறது பாண கங்கா.

பால_கங்கா: இந்த நதி நீரில், ஸ்ரீவைஷ்ணவிதேவி தன் கூந்தலை அலசிய தால், பால கங்கா என்றுபெயர்

ஆகாச_கங்கா: கயிலாய மலையை பரிக்ரமா (கிரிவலம்) செய்யும்போது, அங்கு காணப்படும் நதியே ஆகாச கங்கை

பாதாள_கங்கா: *ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீசைலம் என்ற சிவ சோத்திரத்தின் அருகே பாய்கிறது

தேவ_கங்கா: இது, மைசூர்- சாமுண்டி மலைக்குக் கிழக்கே பாய்கிறது.

துக்த_கங்கா: வடமொழியில் துக்தம் என்றால், பால் என்று பொருள். கேதார்நாத் என்ற ஜோதிர்லிங்க சோத்திரத்தின் அருகே பாய்கிறது.

வாமன்_கங்கா: வாமன் என்றால், குள்ளம் என்று அர்த்தம் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில், பேடாகாட் என்ற சலவைக்கல் பாறைகள் உள்ள இடத்தில் பாய்கிறது.

கபில்_கங்கா: நர்மதை பரிக்ரமா (வலம் வரும்) செய் யும் வழியில் வருவது, தம் கட் என்ற ஊர். இங்கிருந்து சுமார் 3 மைல் தூரத்தில் ஓடுகிறது கபில் கங்கை

கரா_கங்கா: சோணபத்திரை நதியின் உற்பத்தி ஸ்தானத்துக்குத் தெற்கில் அமைந்துள்ள இடம் பிருகு கமண்டலம். இங்கு பாய்வதே கரா கங்கா.

மோக்ஷ_கங்கா: நர்மதை நதியை வலம் வரும்போது சூலபாணேஸ்வரர் எனும் சோத்திரம் வரும். இங்கிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது மோக்கடி என்ற கிராமம். இதையட்டி, மோக்ஷ கங்கா ஓடுகிறது.

 
மேலும் துளிகள் »
temple
அம்பாளுக்கு ஆயிரம் கண்கள் கொண்டவள் என்னும் பொருளில் ’சகஸ்ராக்ஷி’ என்று பெயருண்டு. அதாவது ... மேலும்
 
temple
ஆட்டு மந்தையை விரட்டிக் கொண்டிருந்தான் மேய்ப்பவன் ஒருவன். அதில் ஒரு குட்டியின் காலில் மட்டும் ... மேலும்
 
temple
குறையில்லா வாழ்வு பெற ராகவேந்திரர் போற்றியை படியுங்கள்

ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி
ஓம் ... மேலும்
 
temple
ஒவ்வொரு முறையும் பக்தர்களை காக்க மகாவிஷ்ணு ஏதாவது ஒரு அவதாரம் எடுப்பது வழக்கம். ஆனால் தாயின் கருவில் ... மேலும்
 
temple

ஆறுமுகனின் ஆணை மார்ச் 26,2019

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோயிலின் திருப்பணியில் கருப்பமுத்து என்பவர் வேலை செய்தார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.