பழநியில் விரைவில் திருப்பணி மாறுகிறது அன்னதான கூடம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2018 01:04
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் கும்பாபிேஷக திருப்பணிகள் துவங்க உள்ளன. மலையில் உள்ள அன்னதான கூடத்தை அடிவாரம் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.பழநி முருகன் கோயிலில் 2006 ல் கும்பாபிேஷகம் நடந்தது. மீண்டும் 2018 அல்லது 2019 ல் கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்துள்ளனர்.மலைக்கோயிலில் காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணிவரை அன்னதானம் வழங்கப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தை தொடர்ந்து, பழநி கோயிலில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி மலையில் உள்ள அன்னதானம் கூடத்தை அடிவார பகுதிக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், வைகாசியில் கும்பாபிேஷக திருப்பணிகள் துவங்க உள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யவும் மாற்றங்கள் செய்ய உள்ளோம். திருஆவினன்குடி கோயிலிலும் அன்னதான கூடத்தை, பழைய கோயில் அலுவலகத்திற்கு மாற்ற உள்ளோம் என்றார்.