மீனாட்சி திருக்கல்யாணம்: இணைய தள முன்பதிவு துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2018 02:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்.,27 ல் நடக்கும் திருக்கல்யாணத்தை காண தெற்கு கோபுரம் வழியாக 6 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. திருக்கல்யாணத்தை காண விரும்பும் பக்தர்கள் இணைய தளம் (www.maduraimeenakshi,org) வழியாக கட்டண சீட்டுக்கான (500 ரூபாய், 200 ரூபாய்) முன்பதிவு இன்று (ஏப்.,18) முதல் ஏப்.,22 வரை நடக்கிறது. பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றில் எதாவது ஒரு அடையாள அட்டையுடன் அலைபேசி வைத்துள்ளோர் மின் அஞ்சல் முகவரி தந்து முன்பதிவு செய்யலாம். அலைபேசி இல்லாதோருக்கு மேற்கு சித்திரை வீதி பிர்லா தங்கும் அறையில் நேரடி முன்பதிவு செய்யப் பட்டுள்ளது.