திருச்சி: திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நடந்த சித்திரை தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசித்தி பெற்ற சக்தி தலமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில், உலக நன்மைக்காக மாரியம்மனும், பக்தர்களும், 28 நாட்கள் கடைப்பிடித்த பச்சைப் பட்டினி விரதம், 8ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து சித்திரை தேர் திருவிழா தொடங்கியது. நேற்று விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. நேற்று காலை, 11:30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், பராசக்தி கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், நிலையை அடைந்தவுடன், உற்சவர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.