பதிவு செய்த நாள்
25
ஏப்
2018
12:04
தர்மபுரி: தர்மபுரி நெசவாளர் காலனியில், சித்ரா பவுர்ணமி மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சக்தி கரக அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம், காலை, 9:00 மணிக்கு, கணபதி ஹோமம், ஓம்சக்தி விநாயகர், வள்ளி, தெய்வானை, முருகன் சுவாமிகளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு, ஓம்சக்தி மாரியம்மனுக்கு, கரக அழைப்பும், மாலை, 5:00 மணிக்கு மேல், அம்மனுக்கு, பொங்கல் படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று, மாலை, 4:00 மணிக்கு, ஓம்சக்தி மாரியம்மனுக்கு, மாவிளக்கு எடுக்கும் விழா நடக்கிறது. வரும், 27ல், அம்மனுக்கு, சிறப்பு அபி?ஷகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. வரும், 29ல், காலை, 9:30 மணிக்கு, பால்குடம் ஊர்வலம் இரவு, 9:00 மணிக்கு, திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.