திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2018 01:04
திருவாடானை, திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா ஏப்.20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு வல்மீகநாதர்,பாகம்பிரியாள் தாயார் திருமணகோலத்தில் காட்சியளித்தனர். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க இரவு 12:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. தேவஸ்தான கண்காணிப்பாளர் பரமேஸ்வரபாண்டியன், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 28 ல் தேரோட்டமும், மறுநாள் தீர்த்தவாரியும் நடைபெறும்.