பதிவு செய்த நாள்
10
ஜன
2012
11:01
தென்காசி : வானரமுட்டி அய்யனார் கோயிலில் வரும் 19ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா வானரமுட்டி வெயிலுகந்த அய்யனார், கிளிக்கூட்டு கருப்பசாமி கோயிலில் திருப்பணி நடந்து முடிந்தது. இதனையடுத்து வரும் 19ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக 17ம் தேதி யாகசாலை பூஜை துவங்குகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு புண்யாகவாசனம், கணபதி ஹோமம், கஜ பூஜை, மிருத்யுஞ்ச ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், யந்திர ஜெபம், பூர்ணாகுதி நடக்கிறது. மாலையில் யாகசாலை நிர்மானம், தனலட்சுமி பூஜை, மிருத்சங்கரணம், தீர்த்தசங்கரணம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, ஆச்சார்யவர்ணம், யஜமான வர்ணம், ரக்ஷாபந்தனம், கலாகர்ஷணம், யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, பிரசாதம் வழங்கல் நடக்கிறது. வரும் 18ம் தேதி காலையில் இரண்டாம் யாகசாலை பூஜை, மாலையில் மூன்றாம் யாகசாலை பூஜை, இரவு யந்திர பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாத்துதல் நடக்கிறது. 19ம் தேதி காலையில் நான்காம் கால யாகசாலை பூஜை, 9.30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கும்பாபிஷேகம், 12 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடக்கிறது. இதன் பின்னர் அன்னதான மண்டப திறப்பு விழா நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியார் மற்றும் கோமரத்தார்கள் செய்து வருகின்றனர்.