பழநி, பழநி முருகன் கோயிலில், அலுவலர்கள், ஊழியர்களுக்கு தீ விபத்து முன்எச்சரிக்கை, தடுப்பு குறித்து தீயணைப்பு துறையினர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான குழுவினர் காஸ்சிலிண்டர் மற்றும் சமையல் அறையில் தீப்பற்றி எரிந்தால் அணைப்பது, மேல்மாடி, குறுகிய இடங்களில் மயங்கி கிடப்போரை காப்பாற்றுவது குறித்து செய்து காண்பித்தனர். மேலும் திடீரென மலையில் பாம்பு வந்தால் பயப்படாமல் எவ்வாறு பிடிப்பது எனவும் பயிற்சி அளித்தனர். கோயில் பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள், செக்யூரிட்டிகள், துப்புரவுபணியாளர்கள் பங்கேற்றனர்.