மதுரை : சுற்றுலாத்துறை சார்பில் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிகளில் வெளிநாட்டினர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று மீனாட்சி திருக்கல்யாணத்தில் வெளிநாட்டவர் அதிகம் பங்கேற்றனர். இன்று (ஏப்., 28) நடக்கும் தேரோட்டத்தை பார்க்க வடக்குமாசிவீதி, மேலமாசிவீதி சந்திப்பில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஏப்., 30 அழகர் ஆற்றில் இறங்கும் விழாவையும் கண்டுகளிக்கின்றனர்.