பதிவு செய்த நாள்
28
ஏப்
2018
02:04
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி, ஜீவானந்தபுரம் பகுதியில் உள்ள ஜலமுத்து மாரியம்மன் கோவிலில், 45ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி நிகழ்ச்சி நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, இன்று காலை 7 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 5 மணிக்கு யாகசாலை பூஜை, மாலை 6 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, மகா தீபாராதனையும், தொடர்ந்து மாரியம்மன் உள் புறப்பாடு நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு யாகசாலை பூஜை, இரவு 8 மணிக்கு மகாபூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடக்கிறது. நாளை 29ம் தேதி காலை 5.30 மணிக்கு அம்மணுக்கு அபிஷேக ஆராதனைகள், காலை 7 மணிக்கு பாக்கமுடையான்பட்டு குளக்கரையிலிருந்து ஜலம் திரட்டி கரகம் ஜோடித்து ஊர்வலம் வருதல், மதியம் 1.30 மணிக்கு பால் சாகை வார்த்தல், மாலை 6 மணிக்கு அம்மன் வர்ணித்தல், இரவு 7 மணிக்கு காத்தவராயன் சுவாமிக்கு கும்பம் படைத்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து இரவு 9 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது. வரும் 30ம் தேதி, காலை 8 மணிக்கு அபிஷேகம் ஆராதனையும், மாலை 3 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம நிர்வாக கமிட்டி மற்றும் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.