பதிவு செய்த நாள்
28
ஏப்
2018
02:04
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த, கொங்கு செட்டிப்பட்டி உத்தண்டி கவுண்டனூர், மஹா மாரியம்மன் கோவிலில், அஷ்டபந்தன கும்பாபி ?ஷக விழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு விநாயகருக்கு முதற்கால வேள்வி பூஜை, மஹா தீபாராதனை நடந்தது. 9:00 மணிக்கு மேல், திருப்பள்ளி எழுச்சி, அஷ்டபந்தன, பஞ்சலோக, நவரத்தின, சுவர்ணபந்தம் செய்து, மஹா மாரியம்மன் கருவறையில் அமர்த்துதல் நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு, இரண்டாம்கால வேள்வி பூஜை, விசேஷ திரவிய ஆஹிதி, பூர்ணாஹூதி மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. காலை, 7:30 மணிக்கு மேல், கோபுர கலசத்துக்கு மஹா அஷ்டபந்தன கும்பாபி?ஷகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.