வால்பாறை: சிறுகுன்றா மதுரைவீரன் கோவில் விழாவில், சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா எஸ்டேட் மதுரைவீரன் திருக்கோவிலின், ஒன்பதாம் ஆண்டு திருவிழா கடந்த, 25ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் சுவாமிக்கு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. நேற்று காலை , 11:00 மணிக்கு மதுரைவீரன் சுவாமி, வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.