பதிவு செய்த நாள்
03
மே
2018
11:05
தாமல்: தாமல், தாமோதர பெருமாள் கோவிலில், மே, 11ல், கோடை திருமஞ்சன மஹோத்ஸவம் துவங்குகிறது. காஞ்சிபுரத்தில் இருந்து, சென்னை – வேலுார் தேசிய நெடுஞ்சாலையில், 15 கி.மீ.,யில் உள்ள தாமல் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான, திருமாலழகி சமேத தாமோதர பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை மாதத்தில், மஹா சாந்தி ஹோமம், குதிரை வாகனம் மற்றும் கோடை திருமஞ்சன மஹோத்ஸவம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு உற்சவம், மே, 11ல், மஹா சாந்தி ஹோமம் துவங்குகிறது. 12ல், மாலை, 5:00 மணிக்கு, தாமோதர பெருமாள், குதிரை வாகனத்தில் வீதியுலா வருகிறார். வரும், 13ல், கோடை திருமஞ்சன வைபவத்தில், காலை, 9:00 மணிக்கு, திருமஞ்சன குடம் வலம் வருதலும், அதனைத்தொடர்ந்து, பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை, 3:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.