சூலுார்: சூலுார் கலங்கல் ரோட்டில் உள்ள காட்டூர் மாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கட ந்த, 17ல் சாமி சாட்டுதலுடன் துவங்கியது. 24ல் அக்னி கம்பம் நடப்படடது. தினமும் அம்மனுக்கு அபிேஷக அலங்கார பூஜைகள் நடந்தன. 29ல் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை நொய்யல் ஆற்றில் இருந்து மேள, தாளத்துடன் அம்மை அழைத்தல் நடந் தது. ஏராளமான பெண்கள் பால், தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.