மானாமதுரை;மானாமதுரை வீர அழகர் கோயிலில் கடந்த 26 ந் தேதி காப்பு கட்டுடன் சித்திரை திருவிழா துவங்கியது. கடந்த 30 ந் தேதி வைகை ஆற்றுக்குள் வீர அழகர் வெண்பட்டு உடுத்தி இறங்கினார். மறுநாள்ஆற்றுக்குள் இரவு நிலாச்சோறுநிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று(மே 3)ல் காலை தசாவதார காட்சிக்காகவீர அழகர் கருட வாகனத்தில் எழுந்தருளினார். இரவு வீர அழகர்,ராம அவதாரம்,கிருஷ்ணர் அவதாரம், மச்ச அவதாரம்உள்ளிட்ட அலங்காரங்களில் தோன்றி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.