பதிவு செய்த நாள்
05
மே
2018
12:05
ஊத்துக்கோட்டை: சப்த கன்னியர் கோவிலில் நடந்த, அக்னி பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.
ஊத்துக்கோட்டை, ரெட்டித்தெரு பூந்தோப்பு பகுதியில் உள்ளது, சப்த கன்னியர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவில், பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்டது. செவ்வாய், வெள்ளி மற்றும் விசஷே நாட்களில் நடைபெறும் பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்பர். நேற்று, அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் பிறந்தது. இதையொட்டி, சப்த கன்னியருக்கு சிறப்பு பூஜை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, சப்த கன்னியருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல், கிராம தேவதை செல்லியம்மன் கோவில், எல்லையம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களில், கத்திரி பூஜை நடந்தது.