பராமரிப்பின்றி சேதமடைந்த சேதுக்கரை பெருமாள் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2018 12:05
கீழக்கரை: சேதுக்கரை அருகே சின்னக்கோயில் என்னுமிடத்தில் ஏகாந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் உள்ளது. கோயிலின் அர்த்த மண்டபம் மற்றும் பிரகாரப்பகுதிகள் சேதமடைந்துள்ளது. இக்கோயிலில் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் உச்சரித்து வழங்கப்படும் துளசி தீர்த்தம், காய்ச்சல், தலைவலியை குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது. பழமையும், புராதன சிறப்பினையும் கொண்ட இக்கோயில் இருக்கும் இடம் புதர்மண்டி காணப்படுகிறது. விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறையுடன் இணைந்து ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் பூர்வாங்கப் பணிகளை தொடங்கி, கும்பாபிஷேகத்திற்கு வழிகாணும் முயற்சியை எடுக்க வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர்.