பதிவு செய்த நாள்
08
மே
2018
11:05
ஆனைமலை;ஆனைமலை மதுரைவீரன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வழிபாடு செய்தனர்.ஆனைமலை மதுரை வீரன்கோவில் திருவிழாவில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, சேத்துமடை காளியம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் அலகு குத்தி, தீர்த்தம்எடுத்து வந்தனர்.பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள ஐயப்பன் கோவில் வழிபாடு முடிந்ததும், காலை, 11:00 மணிக்கு மதுரைவீரனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில்,அன்னதானம் நடந்தது.இன்று, 8ம் தேதி மாலை, 5:00 மணிக்கு ஆழியாற்றங்கரையில் இருந்து சக்தி கும்பத்துடன், பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி காலை திருக்கல்யாணம் மற்றும் மாலையில்மாவிளக்கு எடுக்கப்படுகிறது.வரும், 10ம் தேதி அபிஷேகம், அலங்கார வழிபாடும், 11ம் தேதி மஞ்சள் நீராடலும் நடக்கிறது.