பதிவு செய்த நாள்
09
மே
2018
11:05
கொடைக்கானல், கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயிலில் நேற்று மறுபூஜை மற்றும் பாலாபிஷேக விழா நடந்தது. திரளான பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். கடந்த மார்ச் 17 ந்தேதி கோயிலில் கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. மார்ச் 23 முதல் நகரில் உள்ள மண்டகப்படிகளில் அம்மன் சென்று தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அம்மனுக்கு மலர்வழிபாடு, திருக்கல்யாணம் மற்றும் விருந்து உபச்சாரம், பூப்பல்லக்கு பவனி நடந்தது. மே 1 ந்தேதி சக்தி கரகம், மாவிளக்கு மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நிகழ்ச்சி, மறுநாள் அக்னிசட்டி, பொங்கல் வைத்தல், பறவை காவடி நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அம்மனுக்கு மறுபூஜை, பாலாபிஷேக நிகழ்ச்சிகள் நடந்தது. திரளான பக்தர்கள் பால்குடங்களை சுமந்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை தலைவர் முரளி, செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் ஜெயராமன், முன்னாள் நகராட்சி தலைவர் ஸ்ரீதர், ராஜேஷ்கண்ணா, கொடைக்கானல் வட்டார இந்து மகாஜன சங்கம், இந்து முன்னணி, ஆனந்தகிரி இந்து இளைஞரணியினர் செய்திருந்தனர்.